Page Loader
உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Apr 25, 2023
06:09 pm

செய்தி முன்னோட்டம்

துருக்கியின் அன்டலியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை 2023 ஸ்டேஜ் 1இல் இந்திய அணி நான்கு பதக்கங்களுடன் முடித்துள்ளது. மகளிர் கூட்டு ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வெண்ணம் தங்கம் வென்றார். ஜோதி சுரேகா வெண்ணம் கலப்பு இரட்டையர் கூட்டு பிரிவில் ஓஜாஸ் பிரவின் டியோட்டலே உடன் இணைந்து மேலும் ஒரு தங்கத்தை கைப்பற்றி அசத்தினார். ஆடவர் ரிகர்வ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா வெண்கலம் வென்றார். மேலும், திராஜ் பொம்மதேவரா அதானு தாஸ் மற்றும் தருண்தீப் ராய் ஆகியோருடன் இணைந்து ஆடவர் ரிகர்வ் அணி பிரிவில் வெள்ளி வென்றுள்ளனர். மொத்தமாக இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் உலக கோப்பையை முடித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய விளையாட்டு ஆணையம் ட்வீட்