Page Loader
உலக நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா!
உலக நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா

உலக நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா!

எழுதியவர் Sekar Chinnappan
May 25, 2023
12:56 pm

செய்தி முன்னோட்டம்

கிரீஸின் கலிதியாவில் புதன்கிழமை (மே 24) நடைபெற்ற உலக கான்டினென்டல் டூர் சர்வதேச தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி மற்றும் ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். ஸ்ரீசங்கர் முரளி தனது இறுதி முயற்சியில் 8.18 மீ தூரம் தாண்டி தங்கத்தை கைப்பற்றினார். ஸ்ரீசங்கர் முரளி கடந்த ஆண்டும் 8.31 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.85 மீ தூரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதற்கிடையே ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியின் தொடக்கப் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் பிரவீன் சித்திரவேல் இறுதியில் போட்டியில் பங்கேற்கவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post