Page Loader
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான்
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான்

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான்

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2023
07:58 pm

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (மே 10) அஜர்பைஜானின் பாகுவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட ரிதம் சங்வான் 581 புள்ளிகளை பெற்று ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனது முதல் பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அன்னா கொரகாக்கி தங்கமும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒலேனா கோஸ்டெவிச் வெள்ளியும் வென்றனர். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும், ஆறாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதற்கிடையே ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் சரப்ஜோத் சிங் நான்காவது இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post