ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி 2023 : 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
ஜூன் 2 ஆம் தேதி ஜப்பானின் ககாமிகஹாராவில் தொடங்கும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கான 18 பேர் கொண்ட அணியை இந்தியா புதன்கிழமை (மே 10) அறிவித்தது. இதில் ஏ பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீன தைபே, உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இந்தியாவும், பி பிரிவில் ஜப்பான், சீனா, கஜகஸ்தான், ஹாங்காங், இந்தோனேஷியா ஆகிய அணிகளும் விளையாட உள்ளன. இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள் இந்த ஆண்டு எப்ஐஎச் ஜூனியர் மகளிர் ஹாக்கி உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் ஜூனியர் ஆசியக் கோப்பை இந்தியாவிற்கு ஒரு முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள்
இந்தியா ஜூன் 3ல் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதோடு, ஜூன் 5ல் மலேசியாவுக்கு எதிராகவும், ஜூன் 6ல் தென்கொரியாவுக்கு எதிராகவும், ஜூன் 8ல் சீன தைபேவுக்கு எதிராகவும் விளையாட உள்ளன. அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 10ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 11ஆம் தேதியும் நடைபெறும். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் விபரம் கோல்கீப்பர்கள்: மாதுரி கிண்டோ, அதிதி மகேஸ்வரி டிஃபெண்டர்கள்: மஹிமா டெட், ப்ரீத்தி(கேப்டன்), நீலம், ரோப்னி குமாரி, அஞ்சலி பார்வா மிட்ஃபீல்டர்கள்: ருதஜா தாதாசோ பிசல், மஞ்சு சோர்சியா, ஜோதி சாத்ரி, வைஷ்ணவி விட்டல் பால்கே, சுஜாதா குஜூர், மனாஷ்ரி நரேந்திர ஷெடகே முன்கள வீரர்கள்: மும்தாஜ் கான், தீபிகா(துணை கேப்டன்), தீபிகா சோரெங், அன்னு, சுனெலிதா டோப்போ.