ஆசிய போட்டியிலிருந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விலகல்
செய்தி முன்னோட்டம்
இரண்டு முறை காமன்வெல்த் பேட்மிண்டன் சாம்பியனான சாய்னா நேவால், உடற்தகுதி பிரச்சனைகள் காரணமாக வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான தேசிய பேட்மிண்டன் தேர்வு சோதனைகளில் பங்கேற்க மாட்டார்.
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய போட்டிக்கான அணியைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்திய பேட்மிண்டன் அசோசியேஷன் தெலுங்கானாவில் உள்ள ஜ்வாலா குட்டா அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸில் மே 4 முதல் 7 வரை சோதனையை நடத்துகிறது.
"சாய்னா நேவால் சில உடற்தகுதி பிரச்சினைகளால் பங்கேற்க மாட்டார். மேலும் ஆடவர் ஜோடியான குஷால் ராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் சோதனையில் இருந்து விலகியுள்ளனர்." என்று இந்திய பேட்மிண்டன் அசோசியேஷன் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா தெரிவித்தார்.
provisionally selected players for asian cup 2023
ஆசிய விளையாட்டு 2023 தேர்வு சோதனைகளுக்கான வீரர்களின் பட்டியல்
ஆடவர் ஒற்றையர் : லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரியன்ஷு ரஜாவத், மிதுன் மஞ்சுநாத், சாய் பிரனீத், மைஸ்னம் மீராபா, பாரத் ராகவ், அன்சல் யாதவ், சித்தாந்த் குப்தா
மகளிர் ஒற்றையர் : ஆக்ரிஷி காஷ்யப், மாளவிகா பன்சோத், அஷ்மிதா சலிஹா, அதிதி பட், உன்னதி ஹூடா, அலிஷா நாயக், ஷ்ரியான்ஷி வாலிஷெட்டி, அனுபமா உபாத்யாய்
ஆடவர் இரட்டையர் : எம்ஆர் அர்ஜுன்/துருவ் கபிலா, கிருஷ்ண பிரசாத்/விசுவர்தன், சூரஜ் கோலா/ப்ருத்வி ராய், நிதின் எச்வி/சாய் பிரதீக்.
மகளிர் இரட்டையர் : அஸ்வினி பட்/ஷிகா கவுதம், தனிஷா க்ராஸ்டோ/அஷ்வினி பொன்னப்பா, ராதிகா ஷர்மா/தன்வி ஷர்மா
கலப்பு இரட்டையர் : ரோஹன் கபூர்/சிக்கி ரெட்டி, சாய் பிரதீக்/தனிஷா க்ராஸ்டோ, ஹரிஹரன்/வர்ஷினி, ஹேமகேந்திர பாபு/கனிகா கன்வால்.