NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை வில்வித்தை 2023 : நான்கு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
    ஆசிய கோப்பை வில்வித்தை 2023 : நான்கு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
    1/2
    விளையாட்டு 1 நிமிட வாசிப்பு

    ஆசிய கோப்பை வில்வித்தை 2023 : நான்கு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    May 02, 2023
    06:50 pm
    ஆசிய கோப்பை வில்வித்தை 2023 : நான்கு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
    நான்கு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

    ஆசியக் கோப்பை இரண்டாவது நிலை உலகத் தரவரிசைப் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர்கள் செவ்வாய்கிழமை (மே 2) நடந்த ரிகர்வ் மற்றும் கூட்டுப் பிரிவுகளில் நான்கு குழுப் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். மிருணாள் சவுகான், துஷார் ஷெல்கே மற்றும் ஜெயந்தா தாலுக்தார் அடங்கிய இந்திய ஆடவர் ரிகர்வ் அணி 6-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. வெள்ளியன்று நடைபெறும் தங்கப் பதக்க மோதலில் இந்திய ஆடவர் ரிகர்வ் அணி சீனாவுடன் மோதுகிறது. இதேபோல் சங்கீதா, பிராச்சி சிங் மற்றும் தனிஷா வர்மா அடங்கிய இந்திய மகளிர் ரிகர்வ் மகளிர் அணி அரையிறுதியில் 6-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது. இதையடுத்து இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.

    2/2

    கூட்டு ஆடவர் அணி மற்றும் மகளிர் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

    அபிஷேக் வர்மா, குஷால் தலால் மற்றும் அமித் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் கூட்டு அணி 236-221 என்ற புள்ளிக்கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வெள்ளியன்று தங்கப் பதக்கப் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இதே போல் பர்னீத் கவுர், பிரகதி மற்றும் ராகினி மார்கூ ஆகியோர் அடங்கிய இந்திய கூட்டு மகளிர் அணி தகுதிச் சுற்றில் முதலிடம் பெற்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அவர்களும் தங்கப் பதக்க மோதலில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறார்கள். இந்தியாவுக்கு கடும் போட்டியை கொடுக்கக் கூடிய தென்கொரிய வீரர்கள் யாரும் இதில் பங்கேற்காததால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    இந்திய அணி

    இந்தியா

    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைப்பு - சி.என்.என். புகழாரம்  ஜம்மு காஷ்மீர்
    வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  உச்ச நீதிமன்றம்
    47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?  வாட்ஸ்அப்
    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை ஜம்மு காஷ்மீர்

    இந்திய அணி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி டெஸ்ட் தரவரிசை
    WTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஆசிய போட்டியிலிருந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விலகல் சாய்னா நேவால்
    டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023