Page Loader
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு!
இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு!

எழுதியவர் Sekar Chinnappan
May 08, 2023
05:52 pm

செய்தி முன்னோட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2023 தொடரின் 43 வது போட்டியில் பீல்டிங் செய்யும் போது கே.எல்.ராகுலுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, ராகுலுக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்து, தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Suryakumar ruturaj mukesh selected as stand by players

சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமாருக்கு அணியில் இடம்?

கே.எல்.ராகுலை தவிர்த்து ஜெய்தேவ் உனட்கட்டும் காயமடைந்து தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையில் உள்ளார். அவரது பங்கேற்பு குறித்து கடைசி நேரத்தில் முடிவு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூரும் காயமடைந்த நிலையில், அவர்கள் தற்போது கிட்டத்தட்ட குணமடைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில் உள்ளனர். இந்நிலையில், கடைசி நேர சிக்கலை தவிர்க்க அணியின் காத்திருப்பு வீரர்களாக சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமாரை பிசிசிஐ அறிவித்துள்ளது.