ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023 : குழு 'பி'ல் இடம் பெற்றது இந்தியா!
வியாழன் (மே 11) அன்று தோஹாவில் உள்ள கட்டாரா ஓபரா ஹவுஸில் நடந்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கூட்டத்தில் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023 இல் பங்கேற்கும் அணிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டன. இதில் குழு பி இல் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து விளையாட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும். பாலஸ்தீனத்திடம் பிலிப்பைன்ஸ் தோல்வியடைந்த பிறகு, ஹாங்காங்கிற்கு எதிரான கடைசி தகுதிச் சுற்று ஆட்டத்திற்கு முன்பே இந்தியா தனது தகுதியைப் பெற்றுள்ளது. மேலும் ஆசியக் கோப்பையில் இந்திய கால்பந்து அணி பங்கேற்பது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன்பு 1964, 1984, 2011 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
ஏஎப்சி ஆசிய கோப்பையில் இடம் பெற்றுள்ள அணிகள்
ஏஎப்சி ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் விபரம் பின்வருமாறு :- குழு ஏ : கத்தார், சீனா, தஜிகிஸ்தான், லெபனான் குழு பி : ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா, இந்தியா குழு சி : ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், பாலஸ்தீனம் குழு டி : ஜப்பான், இந்தோனேசியா, ஈராக், வியட்நாம் குழு இ: தென் கொரியா, மலேசியா, ஜோர்டான், பஹ்ரைன் குழு எப் : சவுதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ் குடியரசு, ஓமன் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்