ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 12) ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா 251.9 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே போல் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் நான்சி 253.3 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். முன்னதாக 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் சரப்ஜோத் சிங்-டிஎஸ் திவ்யாவின் கலப்பு இரட்டையர் அணி தங்கம் மற்றும் ரிதம் சங்வான் வெண்கலம் வென்ற நிலையில் இதுவரை 4 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.