Page Loader
ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்!
லக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்

ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்!

எழுதியவர் Sekar Chinnappan
May 16, 2023
04:03 pm

செய்தி முன்னோட்டம்

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது பேட்மிண்டன் தரவரிசையில் உச்சபட்ச இடமாகும். தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய பேட்மிண்டன் வீரர் எச்.எஸ்.பிரணாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் உலக தரவரிசையில் 17வது இடத்தில் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து 11வது இடத்தையும், சாய்னா நேவால் 36வது இடத்தையும் பிடித்தனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இரண்டு இடங்கள் சரிந்து உலக தரவரிசையில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post