Page Loader
ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை!
துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை ஸ்கீட் பிரிவில் இந்திய வீராங்கனைகள் முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை

ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை!

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2023
05:52 pm

செய்தி முன்னோட்டம்

செவ்வாயன்று (மே 23) கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் பெண்கள் ஸ்கீட் பிரிவில் முதல்முறையாக இந்தியா இரண்டு தனிநபர் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் கனேமத் செகோன் வெள்ளியும், தர்ஷ்னா ரத்தோர் வெண்கலமும் வென்றனர். கஜகஸ்தான் வீராங்கனையான அஸ்ஸெம் ஆர்னிபே மூலம் தங்கம் வென்றார். இது கனேமத்தின் இரண்டாவது தனிநபர் உலகப்கோப்பை பதக்கம் மற்றும் தர்ஷ்னாவின் முதல் சீனியர் இறுதிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்திய வீராங்கனையான மகேஸ்வரி சௌஹான் 24வது இடத்தைப் பிடித்து வெளியேறினார். ஆடவர் ஸ்கீட் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்களான மைராஜ் கான் 17வது இடத்தையும், குர்ஜோத் கங்குரா 19வது இடத்தையும் அனந்த்ஜீத் சிங் நருகா 23வது இடத்தையும் பிடித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post