எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் : 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
ஐரோப்பாவில் மே 26 ஆம் தேதி தொடங்கும் எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக்கில் பங்கேற்கும் 24 பேர் கொண்ட வலுவான இந்திய அணியை இந்திய ஹாக்கி சம்மேளனம் திங்கட்கிழமை (மே 15) அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த முந்தைய ப்ரோ லீக் ஹாக்கி போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இந்நிலையில், ஐரோப்பாவின் நெதர்லாந்தின் ஐந்தோவனில் நடைபெறும் போட்டியில் பெல்ஜியம், நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் அர்ஜென்டினாவுக்கு எதிராக இதே வெற்றி வேட்டையை இந்திய அணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டனின் கீழ் இது அணியின் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
24 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல்
டிஃபென்டர் ஹர்மன்பிரீத் சிங் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். அணியின் துணை கேப்டனாக மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதக், பிஆர் ஸ்ரீஜேஷ். டிஃபெண்டர்கள்: ஹர்மன்பிரீத் சிங் (சி), அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங், சுமித், சஞ்சய், மன்தீப் மோர், குரீந்தர் சிங், ஹர்திக் சிங் (விசி), தில்ப்ரீத் சிங், மொய்ரங்தெம் ரபிச்சந்திர சிங், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், விவேக் சாகர் பிரசாத். முன்கள வீரர்கள்: அபிஷேக், லலித் குமார் உபாத்யாய், எஸ் கார்த்தி, குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், ராஜ் குமார் பால், மந்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங்.