இந்திய அணி: செய்தி

இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியரின் 100வது பிறந்த தினம் இன்று

இந்திய ஹாக்கி அணியின் பொற்காலம் என 1928 முதல் 1956 வரையிலான காலகட்டம் கருதப்படுகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; ஈரானை பழிதீர்த்தது இந்திய கபடி அணி

சீனாவின் ஹாங்சோவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கபடி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தங்கம் வென்றது.

தங்கம் வென்றது மகளிர் கபடி அணி; ஆசிய விளையாட்டில் 100வது பதக்கத்தை வென்று இந்தியா சாதனை

சீனாவின் ஹாங்சோவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கபடி அணி தங்கத்தை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: 13 ஆண்டுகள் கழித்து ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வில்வித்தை போட்டியின் ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி: செபக்டக்ரா பிரிவில் முதல் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) செபக்டக்ரா ரெகு போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கபடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

சீனாவின் ஹாங்சோவில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இன் ஆடவர் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி 61-14 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கம் வென்று அவினாஷ் சேபிள் சாதனை

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) நடந்த 3,000 மீட்டர் ஆடவர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அவினாஷ் சேபிள் தங்கம் வென்றார்.

எஸ்ஏஎப்எப் யு19 சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா

சனிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற ஆடவர் யு19 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள்

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே தங்கம் மற்றும் வெள்ளியை வென்றனர்.

சவூதியிடம் தோல்வி; ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி

வியாழக்கிழமை (செப்.28) சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வியைத் தழுவியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3-நிலை தனிநபர் பிரிவில் சிஃப்ட் கவுர் சாம்ரா மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.

Sports Round Up : குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம்; பாய்மரப்படகில் வெள்ளி; முக்கிய விளையாட்டு செய்திகள்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்ற குதிரையேற்றம் டிரஸ்ஸேஜ் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.

41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்களின் பின்னணி

சீனாவில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் குதிரையேற்றம் டிரஸ்ஸேஜ் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.

41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1982 க்குப் பிறகு முதன்முறையாக குதிரையேற்றத்தில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : பாய்மர படகில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை நேஹா தாக்கூர்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் நாளில், செவ்வாய்க்கிழமை (செப்.26) இந்திய பாய்மர படகு வீராங்கனை நேஹா தாக்கூர், மகளிருக்கான டிங்கி ஐஎல்சிஏ-4 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி : சீனாவின் உலக சாதனையை முறியடித்தது இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் பிரிவில் இந்திய அணி திங்களன்று (செப்டம்பர் 25) தங்கம் வென்று சாதனை படைத்தது.

Sports Round Up: மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்; இந்திய வாலிபால் அணி காலிறுதிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள்

செர்பியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ஆண்டிம் பங்கால் வெண்கலம் வென்றார். மேலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிக்கு முதல் வெற்றி

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற போட்டியில் இந்திய கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியது.

Asian Games : வலுவான தென்கொரியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த இந்திய வாலிபால் அணி

சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், வாலிபால் குழு சி போட்டியில், மூன்று முறை சாம்பியன் மற்றும் 2018 வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவை தோற்கடித்து ஆடவர் இந்திய அணி மறக்கமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

Sports Round Up: இந்திய பாய்மர படகு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்; டாப் விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 20) நடந்த பாய்மர படகு போட்டியின் பல்வேறு பிரிவுகளில் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பாய்மர படகு அணி வெற்றியுடன் தொடக்கம்

சீனாவில் புதன்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாய்மர படகுப் போட்டியில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Sports Round Up : இந்திய வாலிபால் அணி வெற்றி; கால்பந்து அணி சீனாவிடம் தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) இந்திய வாலிபால் அணி கம்போடியாவை வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த போட்டியில் இந்திய கால்பந்து அணி சீனாவிடம் படுதோல்வி அடைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கம்போடியாவை வீழ்த்தியது இந்திய வாலிபால் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த வாலிபால் முதல் நிலை ஆட்டத்தில் இந்திய அணி கம்போடியாவை வீழ்த்தியது.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் காணும் 4 இந்திய தாய்மார்கள்

பெண்களுக்கு, குறிப்பாக இந்தியாவில், மகளிர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு வேலைக்குத் திரும்புவது கடினமான பணியாகும்.

சர்வதேச ஹாக்கி தரவரிசையில் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) திங்களன்று (செப்.18) வெளியிட்ட சமீபத்திய உலக தரவரிசையில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி

சீனாவில் இன்னும் சில தினங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடங்க தொடங்க உள்ளது.

Sports Round Up: இந்திய அணியிலிருந்து ஷிவம் மாவி நீக்கம்; டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்

சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷிவம் மாவி நீக்கப்பட்டுள்ளார்.

ஜோதிடரிடம் ஆலோசித்து இந்திய கால்பந்து அணிக்கு வீரர்களை தேர்வு செய்த தலைமை பயிற்சியாளர்

இந்தியாவின் தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், டெல்லியைச் சேர்ந்த ஜோதிடரான பூபேஷ் ஷர்மாவிடம் வீரர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.

Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.

இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம்

ஆசிய கோப்பைத்தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று (செப்டம்பர் 10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.

கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி

வியாழன் (செப்டம்பர் 7) அன்று தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள 700வது ஆண்டு விழா மைதானத்தில் நடந்த கிங்ஸ் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் ஆடவர் இந்திய கால்பந்து அணி கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவியது.

உலக தடகள சாம்பியன்ஷிப் : 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி

ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இன் ஆடவர் 4x400மீ தொடர் ஓட்ட இறுதிப் போட்டியில் இந்திய அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய மகளிர் கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அறிவிக்கப்பட்டது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி போட்டியில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி

அஜர்பைஜானின் பாகுவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25)நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் ட்ராப் போட்டியில் இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி குமாரி ஐந்தாவது இடம் பிடித்தார்.

துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி

அஜர்பைஜானின் பாகுவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடி தங்கம் வென்றது.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி

வியாழன் அன்று (ஆகஸ்ட் 17) சிரியாவின் டமாஸ்கஸில் பஹ்ரைனுக்கு எதிராக நடந்த கூடைப்பந்து போட்டியில் 66-79 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா

பாரிஸில் நடந்த வில்வித்தை உலகக்கோப்பையில் இந்திய ரிகர்வ் அணி பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.

இந்தியாவின் டி20 தோல்வி குறித்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட அஸ்வின் ரவிச்சந்திரன்

கடந்த இரண்டு மாதங்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியது இந்திய அணி.