ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. இந்தியா சார்பில் போட்டியிட்ட தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரீந்தர் பால் சிங் சந்து ஜோடி மலேசியாவின் ஐஃபா மற்றும் சயாபிக் ஜோடியை எதிர்கொண்டது. இருதரப்பிலும் போட்டி கடுமையாக இருந்த நிலையில், இந்திய ஜோடி மலேசிய அணியை 11-10, 11-10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினர். இது நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 20வது தங்கமாகும். முன்னதாக, ஆடவர் ஸ்குவாஷ் அணி பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியா 20 தங்கம் உட்பட 83 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.