ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி
சீனாவில் இன்னும் சில தினங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடங்க தொடங்க உள்ளது. இதில், பல ஆண்டுகளாக இந்திய விளையாட்டு வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் போட்டிகளில் ஒன்றாக குத்துச்சண்டை உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டையில் இந்தியா இதுவரை 57 பதக்கங்களை வென்றுள்ளது. இது நாட்டிற்கு நான்காவது அதிக பதக்கங்களை பெற்றுக் கொடுக்கும் போட்டியாக உள்ளது. கடைசியாக நடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா குத்துச்சண்டையில் மூன்று பதக்கங்களை வென்றது. மேலும் இந்த முறை இந்திய வீரர்கள் கூடுதல் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை வீரர்களின் பட்டியல்
13 பேர் கொண்ட குத்துச்சண்டைக் குழு இந்தியா சார்பில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறது. உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற நிகாத் ஜரீன் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன் ஆகியோர் சீனாவில் இந்திய குத்துச்சண்டை அணியை வழிநடத்துவார்கள். அதேசமயம், அமித் பங்கல் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற நிது கங்காஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இதில் இடம்பெறவில்லை. வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- ஆடவர்: தீபக் போரியா, சச்சின் சிவாச், சிவ தாபா, நிஷாந்த் தேவ், லக்ஷ்யா சாஹர், சஞ்சீத், நரேந்தர் பெர்வால். மகளிர்: நிகத் ஜரீன், ப்ரீத்தி பவார், பர்வீன் ஹூடா, ஜெய்ஸ்மின் லம்போரியா, அருந்ததி சவுத்ரி, லோவ்லினா போர்கோஹைன்.