LOADING...
ஆசிய விளையாட்டுப் போட்டி: 13 ஆண்டுகள் கழித்து ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13 ஆண்டுகள் கழித்து ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டி: 13 ஆண்டுகள் கழித்து ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 06, 2023
05:39 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வில்வித்தை போட்டியின் ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். காயங்களுடன் போராடினாலும், அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் மற்றும் பஜன் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் ரிகர்வ் அணி வியட்நாம் அணியை 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோல் ஆடவர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ், துஷார் ஷெல்கே, தீரஜ் பொம்மதேவரா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்தியா கடைசியாக 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற நிலையில், தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் பதக்கம் வென்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post