ஆசிய விளையாட்டுப் போட்டி : பாய்மர படகில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை நேஹா தாக்கூர்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் நாளில், செவ்வாய்க்கிழமை (செப்.26) இந்திய பாய்மர படகு வீராங்கனை நேஹா தாக்கூர், மகளிருக்கான டிங்கி ஐஎல்சிஏ-4 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். போபாலின் தேசிய படகோட்டும் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் வீராங்கனையான நேஹா, மொத்தம் 32 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார். இதன் மூலம் தாய்லாந்தின் நோப்பாசோர்ன் குன்பூஞ்சனுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளி வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். மேலும் பாய்மரப் படகிலும் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். இதன் மூலம், இந்தியா தற்போது 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 6 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
பாய்மர படகு போட்டியில் முதல் பதக்கம் வென்றது இந்தியா
🥈🌊 Sailing Success! Neha Thakur, representing India in the Girl's Dinghy - ILCA 4 category, secured the SILVER MEDAL at the #AsianGames2022 after 11 races⛵ This is India's 1️⃣st medal in Sailing🤩👍 Her consistent performance throughout the competition has earned her a... pic.twitter.com/0ybargTEXI— SAI Media (@Media_SAI) September 26, 2023