Page Loader
துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி
துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி

துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2023
07:03 pm

செய்தி முன்னோட்டம்

அஜர்பைஜானின் பாகுவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடி தங்கம் வென்றது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஈஷா சிங் மற்றும் ஷிவா நர்வால் ஜோடி, துருக்கியின் இலேடா தர்ஹான் மற்றும் யூசுப் டிகெக் ஜோடியை 16-10 என்ற புள்ளிகணக்கில் தோக்கடித்து பதக்கத்தைக் கைப்பற்றியது. முன்னதாக, வியாழக்கிழமை சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் & அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தது. இதன்மூலம், இந்தியா தற்போது ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ஈஷா சிங் மற்றும் ஷிவா நர்வால்