Page Loader
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி

ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2023
05:06 pm

செய்தி முன்னோட்டம்

வியாழன் அன்று (ஆகஸ்ட் 17) சிரியாவின் டமாஸ்கஸில் பஹ்ரைனுக்கு எதிராக நடந்த கூடைப்பந்து போட்டியில் 66-79 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஒலிம்பிக் 2024க்கான ப்ரீ-குவாலிஃபையிங் டோர்னமென்ட் ஆசியா 2023இல் இருந்து இந்தியா தோல்வியுடன் வெளியேறியுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்றுக்கு முந்தைய போட்டியான இந்த தொடரில் இந்தியா இரண்டு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆறு அணிகள் மோதிய இந்திய போட்டியில் இந்திய அணியால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. பஹ்ரைன் அணி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதி ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

indian basket ball team in olympics history

ஒலிம்பிக்கில் ஒரே ஒருமுறை மட்டுமே பங்கேற்ற இந்திய கூடைப்பந்து அணி

1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த கோடைக்கால விளையாட்டில் இருந்து கூடைப்பந்து ஒலிம்பிக்கில் ஒரு பதக்க நிகழ்வாக இருந்து வருகிறது. இந்திய ஆடவர் கூடைப்பந்து அணியை பொறுத்தவரை ஒலிம்பிக்கில் பங்கேற்க 1980இல் ஒருமுறை மட்டுமே தகுதி பெற்றது. மாஸ்கோவில் நடந்த அந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியால் 12வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்நிலையில், இந்த முறை தகுதிச் சுற்று போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால், அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சரியான ஃபினிஷிங் இல்லாததால், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.