Page Loader
சவூதியிடம் தோல்வி; ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி

சவூதியிடம் தோல்வி; ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2023
07:46 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை (செப்.28) சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வியைத் தழுவியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சவூதி அரேபியாவை எதிர்கொண்ட இந்திய அணி கடைசி வரை கோல் அடிக்காத நிலையில், ஆட்டத்தின் 51 மற்றும் 57வது நிமிடங்களில் சவூதி அரேபியாவின் முகமது கலீல் மர்ரன் இரண்டு கோல்களை அடித்தார். இந்தியா கடைசி வரை கோல் அடிக்காததால், சவூதி அரேபியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்திய கால்பந்து அணி வெளியேறியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணி இரண்டு முறை தங்கப் பதக்கம் (1951 மற்றும் 1962) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

embed

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி தோல்வி

FULL-TIME ⌛ It ends in a defeat for India, but a massive effort by the boys against Saudi Arabia tonight. Onwards and upwards 👏👏 IND 🇮🇳 0-2 🇸🇦 KSA#INDKSA ⚔️ #19thAsianGames 🏅 #IndianFootball ⚽️ pic.twitter.com/JKTd9v36Rc— Indian Football Team (@IndianFootball) September 28, 2023