ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிக்கு முதல் வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற போட்டியில் இந்திய கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடந்த சீனாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 1-5 இந்தியா தோல்வியடைந்த நிலையில், வங்கதேசமும் தனது தொடக்க ஆட்டத்தில் மியான்மரிடம் தோல்வியைத் தழுவி இருந்தன. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுமே இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் போட்டி கடுமையாக இருந்தது. கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்க போராடிய நிலையில், ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் சுனில் சேத்ரி பெனால்டி மூலம் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றி இந்தியா 1-0 என வெற்றி பெற வழிவகுத்தார்.
வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய கால்பந்து அணி
Victory Alert at #AsianGames🚨#Football⚽ Team 🇮🇳 men's team breaks the deadlock & triumphs over 🇧🇩 in today's group stage match, clinching a 1-0 win🔥 Special shout out to @chetrisunil11 for his goal via a penalty conversion 🥳👏 Many congratulations Team 🇮🇳#Cheer4India... pic.twitter.com/3CC3WbdJ6F— SAI Media (@Media_SAI) September 21, 2023