Page Loader
உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா
உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா

உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2023
02:08 pm

செய்தி முன்னோட்டம்

பாரிஸில் நடந்த வில்வித்தை உலகக்கோப்பையில் இந்திய ரிகர்வ் அணி பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது. அதே நேரத்தில் தென் கொரியா மற்றும் சீன தைபே தங்கப் பதக்கப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றன. இது 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியாகவும் இது உள்ளது. இந்திய ஆடவர் ரிகர்வ் வீரர்களான தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ் மற்றும் துஷார் பிரபாகர் ஷெல்கே ஆகியோர் அடங்கிய அணி 6-2 என்ற கணக்கில் ஸ்பெயின் நாட்டின் பாப்லோ அச்சா, யுன் சான்செஸ் மற்றும் ஆண்ட்ரஸ் டெமினோ அடங்கிய அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் இந்திய ஆடவர் ரிகர்வ் அணி, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக உலகக்கோப்பை பதக்கத்தை வென்றுள்ளது.

indian woman team won bronze

இந்திய மகளிர் வில்வித்தை அணிக்கும் வெண்கலம்

பஜன் கவுர், அங்கிதா பகத், மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் இந்திய ரிகர்வ் அணி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தனர். அவர்கள் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட மெக்சிகோவின் அலெஜான்ட்ரா வலென்சியா, ஏஞ்சலா ரூயிஸ் மற்றும் ஐடா ரோமன் ஆகியோரை 4-4 என சமன் செய்த நிலையில், ஷூட்-ஆஃப் வீழ்த்தி வெற்றி பெற்றனர். ஷூட்-ஆஃபில் சிறப்பாக செயல்பட்டு இந்திய வீராங்கனை பஜன் கவுர் அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். இதற்கிடையே, தென் கொரியாவும், சீன தைபேயும் ஆடவர் மற்றும் மகளிர் ரிகர்வ் அணி இறுதிப்போட்டியில் தங்கத்திற்கு போட்டியிட உள்ளன.