ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்
செய்தி முன்னோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய மகளிர் கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அறிவிக்கப்பட்டது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி போட்டியில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டார்.
முன்னாள் கேப்டனும் ஸ்டார் ஸ்ட்ரைக்கருமான பாலா தேவி நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அவர் கடைசியாக 2019 இல் காத்மாண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார்.
2005 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ள பாலா தேவி, 2020இல் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
indian women football squad for asian games
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளின் பட்டியல்
இந்திய கால்பந்து அணியில் இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த கோல்கீப்பர் சௌமியா நாராயணசாமி, மிட்பீல்டர் இந்துமதி கதிரேசன், முன்கள வீரர் சந்தியா ரங்கநாதன் என மூன்று வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகளின் முழு பட்டியல் பின்வருமாறு:-
கோல்கீப்பர்கள்: ஸ்ரேயா ஹூடா, சௌமியா நாராயணசாமி, பாந்தோய் சானு.
டிஃபெண்டர்கள்: ஆஷாலதா தேவி, ஸ்வீட்டி தேவி, ரிது ராணி, தலிமா சிப்பர், அஸ்தம் ஓரான், சஞ்சு, ரஞ்சனா சானு.
மிட்பீல்டர்கள்: சங்கீதா பாஸ்ஃபோர், பிரியங்கா தேவி, இந்துமதி கதிரேசன், அஞ்சு தமாங், சௌமியா குகுலோத், டாங்மேய் கிரேஸ்.
முன்கள வீரர்கள்: பியாரி சாக்ஸா, ஜோதி, ரேணு, பாலா தேவி, மனிஷா, சந்தியா ரங்கநாதன்.
தலைமை பயிற்சியாளர்: தாமஸ் டென்னர்பி.