உலக தடகள சாம்பியன்ஷிப் : 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி
செய்தி முன்னோட்டம்
ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இன் ஆடவர் 4x400மீ தொடர் ஓட்ட இறுதிப் போட்டியில் இந்திய அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவியது.
முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, முன்னதாக, தகுதிச் சுற்றில் 2.59.05 நிமிடங்களில் இலக்கை எட்டி இரண்டாவது இடம் பிடித்திருந்தனர்.
மேலும் இதன் மூலம் ஆசிய சாதனையையும் முறியடித்தனர்.
இதனால், இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு நிச்சயம் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்த நிலையில், 2.59.52 நிமிடங்களில் இலக்கை எட்டி கடைசி இடம் பிடித்தது.
இதில் அமெரிக்கா தங்கத்தையும், பிரான்ஸ் வெள்ளியையும், பிரிட்டன் வெண்கலத்தையும் வென்றது.
ட்விட்டர் அஞ்சல்
4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா தோல்வி
World Athletics Championship 2023 | India finishes 5th in 4X400m Men's Relay Race; Indian quartet of Athletes Muhammed Anas Yahiya, Amoj Jacob, Muhammed Ajmal Variyathodi & Rajesh Ramesh finishes race in 2:59.92 seconds.
— ANI (@ANI) August 27, 2023
(File pic) pic.twitter.com/QGrn0mSgvn