Page Loader
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; ஈரானை பழிதீர்த்தது இந்திய கபடி அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய கபடி அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; ஈரானை பழிதீர்த்தது இந்திய கபடி அணி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 07, 2023
04:05 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் ஹாங்சோவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கபடி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தங்கம் வென்றது. முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக மோதிய நிலையில், இந்தியா 17-13 என முன்னிலையை பெற்றது. இரண்டாவது பாதியில் போட்டி இன்னும் கடுமையாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் 28-28 என இரு அணிகளும் சமமாக இருந்த நிலையில், இந்திய வீரர் பவானின் ரெய்டு மூலம் கூடுதல் புள்ளிகளை பெற்று இந்தியா வெற்றி பெறும் நிலை உருவானது. ஆனால் ஈரான் வீரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

India beats Iran in Asian Games Kabaddi Final

சர்ச்சைக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி

இதையடுத்து சர்வதேச கபடி விதிப்படி இந்தியாவுக்கு மூன்று புள்ளிகளும் ஈரானுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் கூடுதலாக ஒரு ரெய்டு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஈரானின் அலிரிசா மிசாயன் முதலில் ரெய்டு வந்தார். அவரை இந்திய வீரர்கள் பிடித்ததால், இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு புள்ளி கிடைத்தது. மேலும், அடுத்து இந்தியா சார்பில் ரெய்டு போன நவீன் மற்றொரு புள்ளியை பெற, இந்தியா ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிப்போட்டியில் ஈரானிடம் பெற்ற தோல்விக்கு இந்தியா பழிதீர்த்தது.