Page Loader
41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா
41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா

41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2023
04:28 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1982 க்குப் பிறகு முதன்முறையாக குதிரையேற்றத்தில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. குதிரையேற்றத்தின் டீம் டிரஸ்ஸேஜ் நிகழ்வில் போட்டியிட்ட சதிப்டி ஹஜேலா, ஹ்ரிடே விபூல் சடா, அனுஷ் கார்வல்லா, மற்றும் திவ்யகிருதி சிங் அடங்கிய இந்திய அணி மொத்தம் 209.205 புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்று தங்கம் வென்றது. குதிரையேற்ற போட்டியின் டீம் டிரஸ்ஸேஜ் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வதும் இதுதான் முதல்முறையாகும். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்றத்தில் இந்தியா பெற்றுள்ள நான்காவது தங்கப் பதக்கம் மற்றும் குதிரையேற்றத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 13 வது பதக்கம் இதுவாகும். குதிரையேற்றத்தில் இந்தியா பெற்ற முந்தைய 3 தங்கமும் டெல்லியில் 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

embed

ஆசிய விளையாட்டுப் போட்டி குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம்

#EquestrianExcellence at the 🔝 After 41 long years, Team 🇮🇳 clinches🥇in Dressage Team Event at #AsianGames2022 Many congratulations to all the team members 🥳🥳#Cheer4India#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 🇮🇳 pic.twitter.com/CpsuBkIEAw— SAI Media (@Media_SAI) September 26, 2023