Page Loader
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2023
07:30 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த போட்டியில் இந்திய கால்பந்து அணி சீனாவிடம் படுதோல்வி அடைந்தது. இந்தியா- சீனா இடையே நடந்த முதல் போட்டியில், சீனாவின் கோயா தியானி முதல் கோலை அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது. எனினும் 45வது நிமிடத்தில் இந்தியாவின் ராகுல் கோல் அடிக்க, போட்டியின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் சமநிலை பெற்றது. எனினும், இரண்டாவது பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சீனா மேலும் 4 கோல்களை அடித்தது. மறுமுனையில், இந்தியா கடுமையாக முயற்சி செய்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து இறுதியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இந்தியாவை வீழ்த்தியது.

embed

இந்திய கால்பந்து அணி சீனாவிடம் தோல்வி

FULL-TIME ⌛ Not the best second half, but we will come back stronger in the next game. 🇨🇳 5-1 🇮🇳 📺 @SonySportsNetwk & @SonyLIV#CHNIND ⚔️ #19thAsianGames 🏅 #IndianFootballpic.twitter.com/LEYrv1F6Qf— Indian Football Team (@IndianFootball) September 19, 2023