ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்திய அணியின் முதல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டம்!
செய்தி முன்னோட்டம்
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் போட்டிகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 15 ஆம் தேதி நேருக்கு நேர் மோதும் என்று அறிக்கை கூறுகிறது.
ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா வந்து விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
narendra modi stadium to host odi world cup final
இறுதிப்போட்டி நடைபெறுவது எங்கே?
முதல் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ள நிலையில், நவம்பர் 19 ஆம் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியும் அதே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, இந்தூர், தர்மசாலா, கவுகாத்தி, ராஜ்கோட், ராய்ப்பூர் மற்றும் மும்பை மைதானங்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மொஹாலி மற்றும் நாக்பூர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேலும் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்கு அகமதாபாத், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு மைதானங்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
போட்டிக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், ஐபிஎல் 2023 தொடர் முடிந்த உடன் பிசிசிஐ பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது.