மகளிர் ஹாக்கி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் ஹாக்கி தொடரின் மூன்றாவது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா 1-1 என சமன் செய்தது. போட்டியின் முதல் காலிறுதியில் எந்த தரப்பும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது காலிறுதியில் ஸ்திரேலியாவுக்காக மேடி புரூக்ஸ் கோலை அடித்தார். இதனால் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்ற நிலையில், இந்திய அணியின் தீப் கிரேஸ் எக்கா மூன்றாவது காலிறுதியில் போராடி கோல் அடித்து சமன் செய்தார். இதற்கிடையே முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், அந்த அணி மூன்று ஹாக்கி போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.