
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய அணியின் ஏழு கிரிக்கெட் வீரர்கள், ஒரு காத்திருப்பு வீரர், மூன்று உதவி பந்துவீச்சாளர்கள் மற்றும் துணை ஊழியர்களை கொண்ட இந்திய குழு செவ்வாய்கிழமை (மே 23) அதிகாலை இங்கிலாந்து கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கு ஆயத்தமாக முன்கூட்ட்டியே இந்திய அணி செல்கிறது.
இந்த குழுவில் விராட் கோலி, அஸ்வின் ரவிச்சந்திரன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் அடங்குவர்.
உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனட்கட் காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் இங்கிலாந்து செல்லும் குழுவில் இருப்பதால் முழுமையாக குணமடைந்துள்ளனர் என தெரிகிறது.
rohit sharma leave india after ipl final
ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின் எஞ்சிய வீரர்கள் பயணம்
அணியின் காத்திருப்பு வீரராக உள்ள வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரும் இந்த குழுவுடன் பயணம் செய்ய உள்ளார்.
மேலும் அணியின் வலைப்பயிற்சிக்கு உதவ வேகப்பந்து வீச்சாளர்கள் அனிகேத் சவுத்ரி, ஆகாஷ் தீப் மற்றும் யர்ரா பிருத்விராஜ் ஆகியோரும் கிளம்புகின்றனர்.
இதற்கிடையே கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடி வரும் சேதேஷ்வர் புஜாராவும் இந்த வார இறுதியில் இந்திய அணியுடன் இணைவார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட இதர வீரர்கள் ஐபிஎல் பிளேஆப் போட்டிகள் முடிந்த பிறகு மே 29 அன்று இங்கிலாந்து கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.