
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம்
செய்தி முன்னோட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கவுரவச் செயலாளரான அனில் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 7 முதல் லண்டன் கென்னிங்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
அனில் படேல் இதற்கு முன்பு 2017, 2018 மற்றும் 2019 இல் பல தொடர்களில் இந்திய அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2021இல் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்று இரண்டாம் இடத்தை பிடித்த இந்தியா இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
india squad for wtc final 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல்
இந்திய அணி : ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).
காத்திருப்பு வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.
இதில் இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஐபிஎல்லில் காயமடைந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகியதால் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.