
ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஷேக் சதியா அல்மாசா புதிய சாதனை!
செய்தி முன்னோட்டம்
கேரளாவின் ஆலப்புழாவில் நடைபெற்ற ஆசிய எக்யூப்டு பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கேஎல் டிம்ட் யூனிவர்சிட்டி மாணவி ஷேக் சதியா அல்மாசா, மூன்று தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.
ஷேக் சதியா அல்மாசா ஸ்குவாட்டில் 190கிலோ எடை, 160கிலோ டெட் லிப்ட் மற்றும் மொத்தமாக 427.5 கிலோ எடை தூக்கி மூன்று தங்க பதக்கங்களை வென்று அசத்தினார்.
கூடுதலாக, அவர் பெஞ்ச் பிரஸ்ஸில் குறிப்பிடத்தக்க அளவில் 77.5 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
ஷேக் சதியா ஏற்கனவே கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆசிய எக்யூப்டு பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் ஓபனில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Shaik Sadiya Almasa, a student of KL Deemed to be University, has set a new #AsianRecord on her way to bagging three gold and one bronze medal in the Asian Equipped #Powerlifting Championship held in Alappuzha, #Kerala. pic.twitter.com/9P9VYeGNhJ
— IANS (@ians_india) May 16, 2023