'18ஆம் எண்ணுடன் பிரபஞ்ச தொடர்பு' : ஜெர்சி நம்பர் குறித்து உருகிய விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரருமான விராட் கோலி, தனது 18ஆம் எண் ஜெர்சியுடன் பிரபஞ்ச தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய கோலி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தொடங்கும் போது தனக்கு 18ஆம் எண் ஜெர்சி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மார்ச் 2008 இல் இந்திய அணியை வழிநடத்திய கோலி, தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டியில் தோற்கடித்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றார். "உண்மையைச் சொல்வதென்றால் 18 என்பது நான் அந்த முதல் இந்திய யு19 ஜெர்சியைத் திறந்தபோது எனக்குக் கொடுக்கப்பட்ட எண்ணாகத் தொடங்கியது. நான் ஒருபோதும் அந்த எண்ணை கேட்டுப்பெறவில்லை." என்று கோலி கூறினார்.
18ஆம் எண்ணுடன் தொடர்புடைய சம்பவங்களை விவரித்த கோலி
18ஆம் தேதியன்று அவரது வாழ்க்கையில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்ததால், இந்த எண் தனக்கு முக்கியமானது என்று அவர் கூறினார். "இந்திய அணியின் 2008 ஆகஸ்ட் 18ஆம் தேதி அறிமுகமானேன். எனது தந்தை டிசம்பர் 18, 2006 அன்று காலமானார்." என்று கோலி கூறினார். மேலும் பேசிய கோலி, "இந்த எண்ணுடன் ஒரு பிரபஞ்ச தொடர்பு இருக்க வேண்டும். என்னுடைய ஜெர்சி எண்ணையும் பெயரையும் பலர் அணிந்திருப்பதைப் பார்க்கும்போது கனவில் உள்ளதை போல் உணர்கிறேன்." என்று கூறினார். தற்போது ஐபிஎல்லிலும், விராட் கோலி 18ஆம் எண் கொண்ட ஜெர்சியையே அணிந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்