உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 3 பதக்கங்கள் உறுதி! புதிய வரலாறு படைத்த இந்தியா!
இந்தியாவின் குத்துச்சண்டை வீரர்கள் தீபக் போரியா (51 கிலோ), முகமது ஹுசாமுதீன் (57 கிலோ) மற்றும் நிஷாந்த் தேவ் (71 கிலோ) ஆகியோர் தத்தமது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் குறைந்தபட்சம் மூன்று பதக்கங்களை இந்தியா உறுதி செய்து, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்பு 2019 இல் தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலத்துடன் 2 பதக்கங்களை பெற்றதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று வீரர்களும் மே 12 ஆம் தேதி நடக்கும் அரையிறுதியில் விளையாட உள்ளார்கள். மேலே குறிப்பிட்ட வீரர்களை தவிர்த்து இன்னும் சில வீரர்கள் போட்டியில் இருப்பதால், இந்தியாவின் பதக்க அதிகரிக்க வாய்ப்புள்ளது.