Page Loader
ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி!
ஏஎப்சி ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி

ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி!

எழுதியவர் Sekar Chinnappan
May 18, 2023
07:01 pm

செய்தி முன்னோட்டம்

அக்டோபர் 23 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்று 2ல் இந்திய மகளிர் கால்பந்து அணி ஜப்பான், வியட்நாம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இரண்டு லெக் பிளேஆப் போட்டியில், கிர்கிஸ் குடியரசை 5-0 மற்றும் 4-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்தியா 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்திய அணி குழு சி இல் உலக தரவரிசை பட்டியலில் 61வது இடத்தில் மிகக் குறைந்த தரவரிசை கொண்ட அணியாக உள்ளது. அதே நேரத்தில் 2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜப்பான், உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள மிகவும் வலிமையான அணியாகும்.

india with teams in group c

குழு சி இல் உள்ள அணிகளுடன் இந்தியாவின் புள்ளி விபரங்கள்

வியட்நாமும், போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தானும் முறையே உலக தரவரிசையில் 33 மற்றும் 50 இடங்களில் உள்ளன. இதற்கு முன்பு உஸ்பெகிஸ்தானுடன் மூன்று முறை விளையாடிய இந்தியா ஒரு கோல் மட்டுமே இழந்துள்ளது. இந்தியா கடைசியாக 2019 இல் ஹனோயில் நடந்த நட்பு ஆட்டத்தில் வியட்நாமை எதிர்கொண்டது. அதில் 1-1 என சமநிலை பெற்றது. அதே நேரத்தில் ஜப்பானுடனான இந்திய அணியின் கடைசி மோதல் 1997 ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப்பில் நடந்தது. அதில் இந்தியா 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. மூன்று குழு வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடக்க உள்ள சுற்று 3க்கு முன்னேறும்.