
இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023 : 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா
செய்தி முன்னோட்டம்
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், அடுத்த மாதம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023க்கான 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தார்.
இந்திய அளவில் நடக்கும் கிளப்கள் இடையேயான சூப்பர் கோப்பை 2022-23 சீசன் முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் மீண்டும் பிபா தொடர்களில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர்.
ஸ்டிமாக்கின் கீழ் இந்திய அணி அடுத்த ஆண்டுக்கான ஏஎப்சி கோப்பை, ஜூன் மாதம் நடைபெற உள்ள இண்டர்காண்டினென்டல் கோப்பை மற்றும் ஜூலையில் நடக்க உள்ள எஸ்ஏஎப்எப் கோப்பைக்காக தயாராகி வருகிறது.
ஃபிஃபா தரவரிசையில் தற்போது 101வது இடத்தில் உள்ள இந்தியா, இன்டர்காண்டினென்டல் கோப்பையில் லெபனான் (99), வனுவாடு (164), மங்கோலியா (183) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.
team india for intercontinental cup 2023
ஆயத்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முழு விபரம்
கோல்கீப்பர்கள்: விஷால் கைத், குர்பிரீத் சிங், லாசென்பா டெம்பா, அம்ரீந்தர் சிங்.
டிஃபெண்டர்கள்: சுபாசிஷ் போஸ், ப்ரீதம் கோட்டல், ஆசிஷ் ராய், கிளான் மார்டின்ஸ், ஜிங்கன், நௌரெம் ரோஷன், அன்வர் அலி, ஆகாஷ் மிஸ்ரா, சிங்லென்சனா கோன்ஷாம், மெஹ்தாப் சிங், ராகுல் பேகே, நரேந்தர்.
மிட்ஃபீல்டர்கள்: லிஸ்டன் கோலாகோ, ஆஷிக் குருனியன், சுரேஷ் வாங்ஜாம், ரோஹித் குமார், உதாந்தா சிங், அனிருத் தாபா, நௌரெம் மகேஷ், நிகில் பூஜாரி, யாசிர் முகமது, ரித்விக் தாஸ், ஜீக்சன் சிங், அப்துல் சமத், ராகுல் கேபி, லாலெங்மாவியா ரால்டே, பிபின் சிங், ரவுலின் போர்ஜஸ், விக்ரம் சிங், நந்தகுமார், ஜெர்ரி.
முன்கள வீரர்கள்: மன்வீர் சிங், சுனில் சேத்ரி, சிவசக்தி நாராயணன், ரஹீம் அலி, இஷான்.