உச்ச நீதிமன்றம்: செய்தி

தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்குவதற்கான மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

மணிப்பூர் விவகாரம்: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உருவாக்கியது உச்ச நீதிமன்றம்

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கண்காணிக்க மூன்று முன்னாள் பெண் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

07 Aug 2023

இந்தியா

ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம் 

ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவில் உயிரிழந்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 7) தெரிவித்துள்ளது.

07 Aug 2023

கைது

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு 

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மீண்டும் MP ஆகிறார் ராகுல் காந்தி!

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில், கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

02 Aug 2023

ஹரியானா

ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம் 

ஹரியானாவில் இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக ஹரியானா மற்றும் டெல்லியில் பதட்டம் நிலவி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 2) விசாரிக்கிறது.

'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம்

மணிப்பூர் விசாரணையின் மந்தமான வேகம் குறித்து இன்று கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், "மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது" என்று கூறியுள்ளது.

'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 

மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் 

மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம் 

2022ம் ஆண்டு நவம்பர்.,18ம் தேதியோடு நிறைவடையவிருந்த அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தினை 2023ம்ஆண்டு நவம்பர் 18ம்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலத்தினை நீட்டிக்க மத்திய அரசு கோரிக்கை 

கடந்த வருடம், அமலாக்கத்துறை பதவி காலம் 2 ஆண்டுகள் என்பதனை மூன்று ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றினை இயற்றியது.

ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம் 

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூலை 24) உத்தரவிட்டது.

ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை

இந்திய தொல்லியல் துறையை(ASI) சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இன்று(ஜூலை-24) ஆய்வை தொடங்கினர்.

ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு 

ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ள மனு குறித்து பதில் அளிக்குமாறு பர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டமாக துவங்கிய இந்த கலவரம் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

மோடி குடும்பப்பெயர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி 

'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஜூலை-15) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கிய தொடர் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய உள்ளது.

12 Jul 2023

கைது

செந்தில் பாலாஜி வழக்கு - புலன் விசாரணை குறித்து வாதம் செய்யும் அமலாக்கத்துறை 

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அமலாக்கத்துறையின் தலைவராக மூன்றாவது முறையாக சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பு செய்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) கூறியது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மீதான சிறப்பு அந்தஸ்தினை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை இயக்க முடியாது என்றும், அதைச் செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வேலை என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், திங்கட்கிழமை (ஜூலை10), மணிப்பூர் நிலைமை குறித்த ஒரு சில மனுக்களை விசாரித்த போது கூறினார்.

07 Jul 2023

கைது

செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாகக்கூறி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன்.,14ம்தேதி கைது செய்தனர்.

03 Jul 2023

இந்தியா

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

இந்தியாவில் ஆண்களின் தற்கொலை அதிகரித்து வருவதால், ஆண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்க தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் 

மணிப்பூர் கலவரம் தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

01 Jul 2023

இந்தியா

இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக் காலம் நீட்டிப்பு 

மூத்த வழக்கறிஞரும் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தாவின் பதவிக் காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 21) ஒத்திவைத்தது.

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை 

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 9) மறுப்பு தெரிவித்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிகமாக சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு

சிறப்புமிக்க தென்காசி நகரத்தில் அமைந்துள்ள பழமையான திருவள்ளுவர் கழகம், சமீபத்தில் தனது 96வது திருக்குறள் விழாவை துவங்கியது.

02 Jun 2023

இந்தியா

வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு 

வனப் பாதுகாப்பு (திருத்த) மசோதா-2023 மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 2) ரத்து செய்துள்ளது.

ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

26 May 2023

இந்தியா

புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(மே-26) தள்ளுபடி செய்தது.

ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லியின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று(மே 26) உத்தரவிட்டுள்ளது.