
ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
ஹரியானாவில் இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக ஹரியானா மற்றும் டெல்லியில் பதட்டம் நிலவி வருகிறது.
இந்த கலவரத்தை எதிர்த்து, விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) மற்றும் பஜ்ரங்-தள் ஆகிய இந்து அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்த போராட்டம் நடத்தப்பட்டால் மேலும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்பிருப்பதால், இந்த கலவரத்தை நிறுத்தவேண்டும் என்று கோரி பத்திரிகையாளர் ஷாஹீன்-அப்துல்லா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க தொடங்கி இருந்தது.
அதனால், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5-நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முக்கியான அந்த மனுக்களை விசாரித்து கொண்டிருந்தது.
டியோ
'முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும்': உச்ச நீதிமன்றம்
இந்நிலையில், மனுதாரர் ஷாஹீன் அப்துல்லாவின் வழக்கறிஞர் CU சிங், நீதிபதி அனிருத்தா போஸை இன்று காலை அணுகி, ஹரியானா விவகாரம் குறித்து சீக்கிரம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.
இந்த மனுவின் அவசரத்தை புரிந்து கொண்ட தலைமை நீதிபதி, உடனடியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வை உருவாக்கி, இந்த வழக்கை இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், VHP மற்றும் பஜ்ரங் தள் நடத்தும் போராட்டங்களின் போது வெறுப்பு பேச்சு இருக்க கூடாது என்றும், வன்முறையை தடுக்க வேண்டும் என்றும் மத்திய/மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.