உச்ச நீதிமன்றம்: செய்தி
ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு
இந்தியாவில் ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமைகளை வழங்க கோரிய மனுக்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(NCPCR) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி
தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த போலீசார் முதலில் அனுமதி அளிக்கவில்லை.
லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஐபிஎல் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி, நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த காரணத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
ரங்கநாத் மிஸ்ரா ஆணைப்படி, பட்டியலின கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி ஒன்றினை எழுப்பி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று(ஏப் 11) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம்
தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள செய்தி சேனல் மீடியாஒன் ஒளிபரப்பை தடை செய்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக பிராந்திய மொழிகளை பயன்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து
கடலூரை சேர்ந்த 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 20 ஆண்டுகள் சிறைதண்டனையாக உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
தூக்கு தண்டனைக்கு வேதனை குறைவான மாற்று வழி இருக்கிறதா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(மார் 21) தெரிவித்துள்ளது.
மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ராஷ்டிர சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 18ஆம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் இன்று(மார் 13) தெரிவித்துள்ளது.
ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு
நாட்டில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து மத்திய அரசு நேற்று(மார் 12) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்தார்.
தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம்
தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவதில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி
ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பற்றிய அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உருவாகி இருக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 7பேரில் ஏஜி பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.
நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
"படையெடுப்பாளர்களின்" பெயரால் அழைக்கப்படும் நகரங்கள் மற்றும் வரலாற்று இடங்களின் பெயரை மாற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 27) தள்ளுபடி செய்தது.
அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவும், நீட் தேர்விற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக வழக்கு தொடர்ந்தது.
மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம்
பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு பல்வேறு நாடுகளிலும் வழங்க தொடங்கி இருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதற்கான ஒரு பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டிருந்தது.
தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி
உச்சநீதிமன்றத்தில் தினசரி நடக்கும் வழக்குகள் குறித்த விவரங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள ஏற்கனவே பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அதிமுக'வில் ஒற்றை தலைமை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இருஅணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி
தற்போது இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகும். அதே வேளையில் ஆண்களுக்கான திருமண வயது 21 என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண் இணைப்பதற்கு எதிரான மனு - தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள்
உச்சநீதிமன்றத்தின் இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று(பிப் 13) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
"ஒரு நடிகராக,உங்கள் குரல் மக்களிடம் எதிரொலிக்கும்; பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்": விஜய்சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை
நவம்பர் 2021 இல், பெங்களூரு ஏர்போர்ட் தாக்குதல் வழக்கில், மகா காந்தி என்ற துணை நடிகர் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை, ரத்து செய்யக் கோரி, நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
பிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
2002 குஜராத் மத கலவரத்தின் போது குஜராத்தின் முதலைமச்சராக இருந்த பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசியை மொத்தமாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மத்திய அரசு இன்று(பிப் 10) மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்துள்ளது.
அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது.
ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கை எதிர்த்து பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று(பிப் 7) தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்ற உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு
டெல்லி, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியோடு சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆகும்.
ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள்.
பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 3) விசாரித்ததது.