NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு
    இந்தியா

    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு

    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு
    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023, 07:03 pm 1 நிமிட வாசிப்பு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள். எனவே, அதிமுக'வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் வலம் வந்தன. இந்நிலையில் இதுகுறித்து ஈ.பி.எஸ். தரப்பில் அளிக்கப்பட்ட இடையீட்டு மனுகுறித்த விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான வாதங்கள் நடந்தது. தொடர்ந்து, இந்த விவகாரத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றினை அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான ஓ.பி.எஸ். தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழு நடத்தப்பட்டு, அந்த முடிவின்படி தீர்மானிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இடைக்கால உத்தரவு இந்த இடைத்தேர்தலுக்கு மட்டுமே - உச்சநீதிமன்றம்

    மேலும் இந்த உத்தரவு இந்த இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பொதுக்குழு நடத்தப்பட்டு வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்தெடுக்கப்படும் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும், அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைக்கால ஏற்பாடு என்பது பிரதான வழக்கில் எந்த வகையிலும் தோதாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை. முன்னதாக, இரு அணிகளாக பிரிந்து இருக்கும் அ.தி.மு.க.'வில், ஈ.பி.எஸ். தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு போட்டியிடப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தேர்தல்
    உச்ச நீதிமன்றம்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே! ஏர்டெல்
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் தமன்னா: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐபிஎல் 2023

    தேர்தல்

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு

    உச்ச நீதிமன்றம்

    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ராகுல் காந்தி
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் நாடாளுமன்றம்
    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை மத்திய அரசு
    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து இந்தியா

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி ஈரோடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023