Page Loader
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை

எழுதியவர் Nivetha P
Feb 07, 2023
11:31 am

செய்தி முன்னோட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, அவர்களையடுத்து வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இவர்களுக்கு இன்று(பிப்.,7) சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவி பிராமணம் செய்து வைக்கவுள்ளார். இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது, காலியிடங்கள் 18ஆக உள்ளது. இதனிடையே, மத்திய அரசு வழக்கறிஞராக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சார்பில் குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

சர்ச்சை கருத்துக்கள்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு

அந்த கடிதத்தில் விக்டோரியா கவுரி இந்திய நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல வெறுப்பு மிகுந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார், அந்த பதிவுகள் இன்னமும் இணையத்தில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஓர் பேட்டியில் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை விட அபாயமானவர்கள் என்றும், கிறிஸ்தவ பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடக்கூடாது போன்ற சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் இவர், அந்த கட்சிக்கும், கொள்கைகளுக்கும் விசுவாசமாக உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில், அவர் பதவியேற்கும் நாளான இன்று இதன் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.