டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு
டெல்லி, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியோடு சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆகும். ஆனால் தற்போது 27நீதிபதிகள் கொண்டே நீதிமன்றம் இயங்குகிறது, இதனால் ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. கடந்த டிசம்பர் 13ம்தேதி 5நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நீதிபதி சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. பின்னர் ஜனவரி 31ம்தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிந்தால் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் கூறியது. இந்நிலையில் கடந்த 2மாதங்களாக கொலீஜியம் பரிந்துரைக்கும் நபர்களை நியமிக்காமல் மத்தியஅரசு காலதாமதம் செய்துவருகிறது. இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கையில், இன்னும் 2நாட்களில் நியமனம் தொடர்பான உத்தரவு வெளியாகும் என்று பதிலளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 5 புதிய நீதிபதிகளுக்கு முறையாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்
மேலும் கொலீஜியம் பரிந்துரையை செயல்முறை படுத்தாமல் மத்திய அரசு காலதாமதம் செய்வது மிகதவறு. இதன் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பங்கஜ்மிதல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பி.வி.சஞ்சய்குமார், பாட்னா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ்மிஸ்ரா ஆகியோர் நியமனத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த சனிக்கிழமை(பிப்.,4) கையெழுத்திட்டு ஒப்புதலளித்தார். அதன்படி, 5 நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முறைப்படி இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன்படி தற்போது நீதிபதிகள் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ள நிலையில், மீதம் 2காலியிடங்கள் கொலிஜியம் பரிந்துரைத்த அலகாபாத், குஜராத்தை சேர்ந்த நீதிபதிகள் கொண்டு நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.