பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
செய்தி முன்னோட்டம்
ரங்கநாத் மிஸ்ரா ஆணைப்படி, பட்டியலின கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி ஒன்றினை எழுப்பி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது இன்று(ஏப்ரல்.,12) நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையில் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் பட்டியலின மக்கள் கால காலமாக தீண்டாமைக்கு உள்ளானவர்கள்.
எனவே, அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மதம் ஒரு தடையாக இருக்க கூடாது என்று கூறப்பட்டது.
நீதிமன்றம்
விசாரணையினை ஒத்தி வைத்த நீதிபதி அமர்வு
மேலும், இது குறித்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையினை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய மத்திய அரசு,
தற்போதுள்ள சூழ்நிலையில் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் பல்வேறு ஆணையங்களின் முடிவுகள் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள நிலையில் ஏன் அதனை செயல்படுத்த கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மத மாற்றத்திற்கு பிறகும் சமூக புறக்கணிப்புகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதனையடுத்து அவர்கள், அரசியல் சாசன அம்சங்களை பரிசீலிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும் கூறி விசாரணையினை ஒத்தி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.