ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 7பேரில் ஏஜி பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரையடுத்து நளினி, டி.சுதேந்திரராஜா என்னும் சாந்தன், ஸ்ரீ ஹரன் என்னும் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவி ஆகியோர் நவம்பர் 11ம்தேதி விடுவிக்கப்பட்டனர். இதில் நளினியின் கணவரான முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு இலங்கையர்களை தவிர்த்து மற்றவர்கள் விடுதலையானார்கள். மீதமுள்ள இவர்கள் நால்வர் நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து அரசாங்கத்தின் முடிவு நிலுவையில் உள்ளதால் சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த விவகாரம் குறித்து சென்னை உள்பட சிலவட்டாரங்கள், தமிழகஅரசு காகித வேலைகளில் இழுபறிப்பு செய்வதால் அவர்கள் அங்கிருந்து புறப்படுவது தாமதமாகிறது என்ற கருத்தினை தெரிவித்துவருகிறார்கள்.
இந்தியாவை விட்டு வெளியேற உதவக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம்
இந்த நால்வருள் ஒருவரான சாந்தன் மட்டும் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில் அவரது ஆவணங்கள் மீதான பரிசீலனை நிலுவையில் உள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, முருகன், பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஐரோப்பியா நாடுகளில் நெருங்கிய உறவினர்கள் உள்ளதால் அவர்கள் அங்குச்செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்கள். பயஸ் தனது தாயும், சகோதரியும் வசிக்கும் சுவிட்சலாந்திற்கு அல்லது அவரது மகன் வசிக்கும் நெதர்லாந்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இந்தியாவை விட்டு வெளியேற உதவக்கோரி தமிழக முதல்வருக்கு இரண்டுமுறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாமல் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் ஆவணங்கள் பரிசீலனைக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.