Page Loader
2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள்

2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்

எழுதியவர் Sindhuja SM
Feb 10, 2023
01:14 pm

செய்தி முன்னோட்டம்

உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மத்திய அரசு இன்று(பிப் 10) மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்துள்ளது. ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதிகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரப்பட்டுள்ளன. இனி, உச்ச நீதிமன்றம் அதன் முழு பலத்துடன் இயங்கும். தற்போது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர். "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் பின்வரும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார்." என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்வீட் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்ற 5 நீதிபதிகள்

இவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனவரி 31ஆம் தேதி பரிந்துரைத்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, உச்ச நீதிமன்ற பதவி உயர்வுக்கு ஐந்து பெயர்களை பரிந்துரைத்தது. ஆனால், நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே நீடித்த நியமனங்களினால் ஏற்பட்ட மோதலுக்கு இடையே, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவை மத்திய அரசால் பூர்த்தி செய்யப்பட்டன. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இந்த வார தொடக்கத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.