4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதிகள் ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி கும்பாரப்பன் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் முதன்முறையாக உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தால் உயர் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஆர் ஜான் சத்யன் மற்றும் ராமசாமி நீலகண்டன் ஆகியோரின் பெயர்களை உயர் நீதிமன்றத்திற்கு நியமனம் செய்வதற்கு அறிவிக்குமாறு கொலிஜியம் மத்திய அரசிடம் கேட்டு கொண்டது.
ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை தாமதப்படுத்தாமல் சீக்கிரம் அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியா
தாமதப்படுத்தபடுவதால் நீதிபதிகளின் சீனியாரிட்டிக்கு இடையூறு ஏற்படுகிறது: உச்ச நீதிமன்றம்
ஆர் ஜான் சத்யன் மற்றும் ராமசாமி நீலகண்டன் ஆகியோரின் பதவி உயர்வு பற்றி மத்திய அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற கொலீஜியம், இப்படி தாமதப்படுத்தபடுவதால் நீதிபதிகளின் சீனியாரிட்டிக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவித்தது.
நீதிபதி ஆர். ஜான் சத்யனின் பெயர் 2022 பிப்ரவரி 16-ல் முதன்முதலாக உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
அதன் பிறகு, பல முறை வலியுறுத்தியும், இதுவரை மத்திய அரசிடம் இருந்து இது பற்றி எந்த தகவலும் இல்லை.
இப்போது புதிதாக பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டால், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 62 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.