
தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று(ஏப் 11) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் RSS பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியம், பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்தது.
பிப்ரவரி 10 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், தமிழகத்தில் RSS தனது பேரணியை நடத்த அனுமதித்தது.
ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு போராட்டங்கள் முக்கியம் என்று அப்போது சென்னை உயர் நீதிமன்றம் கூறி இருந்தது.
DETAILS
கடந்த அக்டோபரில் பேரணி நடத்த அனுமதி கோரிய RSS
சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் PFI(பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) பிரச்சனைகளைக் காரணம் காட்டி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டின் தீர்ப்பே இன்று வெளியாகி உள்ளது.
RSS, கடந்த அக்டோபரில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த தமிழக அரசின் அனுமதியை கோரியிருந்தது.
ஆனால், மாநில அரசு RSSக்கு அனுமதி தர மறுத்ததால், RSS உயர் நீதிமன்றத்தை அணுகியது.