Page Loader
RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம்
தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.

RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம்

எழுதியவர் Sindhuja SM
Mar 27, 2023
05:30 pm

செய்தி முன்னோட்டம்

RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது. அமைதியான முறையில் பொது ஊர்வலங்களை நடத்துவது பேசுவதற்கான சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று உயர் நீதிமன்றம் கூறி இருந்ததது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு, RSS தனது பேரணிகளை ஸ்டேடியம் போன்ற மூடிய வளாகத்திற்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) போன்ற அமைப்புகளின் அணிவகுப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்தியா

போலியான வீடியோக்களால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது: தமிழக அரசு

கடந்த மார்ச் 17 அன்று நடந்த விசாரணையின் போது, ​​போலியான வீடியோக்களால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பீதியை மேற்கோள் காட்டி, நீதிமன்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு கோரியது. RSS சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, ஒரு அமைப்பின் அமைதிப் பேரணிகளை அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தக் கூடாது என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது அரசின் பொறுப்பு என்றும் வாதிட்டார். PFI ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தமிழக அரசு, ஒரே நேரத்தில் 50 இடங்களில் RSS பேரணி நடத்த கூடாது, 5 இடங்களில் நடத்தி கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.