Page Loader
பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பிபிசி ஆவணப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை

பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

எழுதியவர் Sindhuja SM
Feb 03, 2023
02:35 pm

செய்தி முன்னோட்டம்

பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 3) விசாரித்ததது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம்.சுந்திரேஷ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஏப்ரல் மாததிற்கு ஒத்திவைத்தது. மேலும், அடுத்த விசாரணையின் போது ஆவணப்பட தடை உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. 2002-குஜராத் கலவரத்தின் போது, ​​குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விமர்சிக்கும் "பிபிசி'ஸ் இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற பிபிசி ஆவணப்படம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.

உச்சநீதிமன்றம்

மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள்

யூடியூப் மற்றும் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த ஆவணப்படத்தின் இணைப்புகளை மத்திய அரசு தடை செய்திருப்பதாக ஜனவரி 21அன்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே பகிரப்பட்ட நூற்றுகணக்கான இணைப்புகள் சமூக வலைதளங்களில் இருந்து அகற்றப்பட்டன. அதன் பின், இந்த ஆவணப்படத்தை திரையிட முயற்சித்த பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி பல்கலைக்கழகங்கள், ஹைதெராபாத் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான பிரச்சனைகள் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, மூத்த பத்திரிகையாளர் என் ராம், ஆர்வலர்-வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்ககளை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது,