Page Loader
மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம்
மீடியாஒன் ஒளிபரப்பை தடை செய்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம்

எழுதியவர் Sindhuja SM
Apr 05, 2023
12:44 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள செய்தி சேனல் மீடியாஒன் ஒளிபரப்பை தடை செய்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த சேனலின் விமர்சனங்களை தேச விரோத செயலாக கருத முடியாது என்றும், துடிப்பான ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எங்கிருந்த வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மீடியாஒன் மீது விதிக்கப்பட்ட ஒளிபரப்புத் தடையை நியாயப்படுத்தும் வகையில், சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தியா

அரசாங்கத்தை விமர்சித்தால் அது தேச விரோத செயல் இல்லை: உச்சநீதிமன்றம்

2020இல் டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்ற போது, அது பற்றி விரிவாகப் செய்திகளை வெளியிட்ட சில சேனல்களில் மீடியாஒன் சேனலும் ஒன்றாகும். "பயங்கரவாதத் தொடர்புகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் திடீரென்று எங்கிருந்தோ வந்ததது என்று கூற முடியாது. மீடியாஒன் வெளியிட்ட எந்தவொரு செய்தியும் தேசிய பாதுகாப்புக்கு எதிரானதாகவோ அல்லது பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகவோ இல்லை என்பது தெரிகிறது." என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊடகங்கள் அரசாங்கத்தை கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பது தவறு என்றும், அரசாங்கத்தை விமர்சிப்பது ஒரு தொலைக்காட்சி சேனலின் உரிமத்தை ரத்து செய்வதற்கான காரணமாக இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.